ஜெய்பீம் !
மராட்டிய மாநில அரசுக்கு இந்திய குடியரசு கட்சியின் சார்பில் பாராட்டுக்கள் !
-----------------------------------------------------------------------------------------------------------------
பாபாசாஹேப் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் 1920-1921 ஆம் ஆண்டில் பொருளாதார பள்ளி மாணவராக லண்டன் மாநகரில், எண்: 10, கிங் ஹென்றி சாலையில் உள்ள வீட்டில் தங்கி படித்தார். தற்போது அந்த வீட்டினை அதன் உரிமையாளர் விற்க வந்ததையடுத்து அண்ணலின் பேரர் பாலாசாஹேப் பிரகாஷ் அம்பேத்கர், இந்திய குடியரசு கட்சி மற்றும் அதன் தலைவர்கள் மற்றும் நாட்டில் உள்ள பல தலித் இயக்கங்கள், அம்பேத்கர்வாதிகள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் கேட்டுக்கொண்டதற்கிணங்க மராட்டிய மாநில அரசு பொறுப்புணர்ந்து அண்ணல் வசித்த வீட்டை ருபாய் 35 கோடிக்கு வாங்கியுள்ளது. மேலும் இந்த வீட்டை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 125வது பிறந்தநாள் விழாவையொட்டி வருகின்ற நவம்பர் மாதம் “அண்ணல் அம்பேத்கர் நினைவகமாக” திறக்க உள்ளதாக செய்திகள் வெளி வந்துள்ளன. இதனை இந்திய குடியரசு கட்சி மகிழ்ச்சியுடன் நெஞ்சார வரவேற்று பாராட்டுகிறது !

அண்ணல் அவர்கள் அங்கு படித்து வாழ்ந்த கால கட்டத்தில் தான் பல சமூக சிந்தனைகளோடு தாழ்த்தப்பட்ட மக்களுக்கான உரிமைகளை பெற, அடிமை விலங்கை உடைத்து எறிய பல திட்டங்களை வகுத்தார். அவை அனைத்தையும் சாதித்தும் காட்டினார். மேலும் அங்கு தங்கியிருந்த காலத்தில் பல சமூக சீர்திருத்த நூல்களையும் எழுதினார்.
அண்ணலின் சமூக ஆதங்கங்கள் மற்றும் சமுதாய ஏக்கங்கள் அந்த வீட்டில் இன்னும் வாழ்ந்து வருகிறது. அதனால் தான் 95 ஆண்டுகள் கழித்தும் அண்ணலின் பெயரால் அந்த வீடு இன்று மறு கட்டமைக்கப்பட்டுள்ளது.
இந்திய நாட்டின் ஒரு மாநில அரசுக்கு வெளிநாட்டில் சொத்து வாங்குவது இதுவே முதல் முறை. இது பாபாசாஹேப் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் செயலால் நடந்துள்ளது. அண்ணல் அவர்கள் வாழ்ந்தபோதும் கொடுத்தார். உடல் மறைந்த போதும் கொடுக்கிறார்.
அண்ணல் அவர்கள் முன்னேறுகின்றார்.....
பொருளாதாரம் படித்தார் !
தான் பிறந்த மண்ணிற்கு பொருளை சேர்த்தார் !
தங்கியிருந்த வீட்டை சொந்தமாக்கிக் கொண்டார் !
ஆம் ! அவர் நிஜத்தில் வாழ்கிறார் !
வாழ்க பாபாசாஹேப் அண்ணல் அம்பேத்கர் !
வளர்க அண்ணலின் புகழ் !
பொருளாதாரம் படித்தார் !
தான் பிறந்த மண்ணிற்கு பொருளை சேர்த்தார் !
தங்கியிருந்த வீட்டை சொந்தமாக்கிக் கொண்டார் !
ஆம் ! அவர் நிஜத்தில் வாழ்கிறார் !
வாழ்க பாபாசாஹேப் அண்ணல் அம்பேத்கர் !
வளர்க அண்ணலின் புகழ் !
கற்பி! புரட்சிசெய்! ஒன்றுசேர்!
ஜெய்பீம்!
ஜெய்பீம்!
இங்கனம்,
எம்.ஜி.நாகமணி
மாநில தலைவர்
இந்திய குடியரசு கட்சி
“அண்ணலகம்”
தமிழ்நாடு.
எம்.ஜி.நாகமணி
மாநில தலைவர்
இந்திய குடியரசு கட்சி
“அண்ணலகம்”
தமிழ்நாடு.
No comments:
Post a Comment